(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு ஒருசிலர் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எமது கட்சியையும் சிரமதானம் செய்துள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதொன்று தற்போது இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளும் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு ஒருசிலர் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எமது கட்சியையும் சிரதமானம் செய்துள்ளார்கள்.
தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை தமிழரசுக் கட்சி 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 6 ஆசனங்களை கைப்பற்றியது. இம்முறை எட்டாக உயர்வடைந்துள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்றும் எம்முடனே உள்ளார்கள்.
நாட்டின் நலன்கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள் என்றும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment