(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
"சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நாம் நம்பிக்கை கொள்கிறோம்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வலவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 225 உறுப்பினர்களும் பொதுமக்கள் சேவைக்காக அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகளில் தங்கள் பங்கை சரியாகச் செய்வதற்கும் பக்கச்சார்பற்றவராகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படுவது உங்களது பொறுப்பாகும்.
அதேபோல், புதிய சபாநாயகரின் பொறுப்பையும் கடமையையும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு, சட்டப்பூர்வமாக நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முன்கொண்டு செல்வதற்கு இயலுமைகிட்ட வேண்டும் என மனமான எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment