இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு...! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு...!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்றையதினம் வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், குகதாசன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment