இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்து பெரும் இழுபறியாக உள்ளது. அதனால் எமது மீனவர்களே பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

அரசாங்கம் எமது நாட்டு மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை.

மிக விரைவில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்க இருக்கிறேன். அதன்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவருடன் விரிவாக கலந்துரையாட எதிர்பார்க்கிறேன்.

அதற்கு முன்பதாக வடக்கு மீனவர்கள் மற்றும் துறை சார்ந்த அனைத்து தரப்புடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment