பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (08) நிறைவடைகின்றது.

கடந்த 30ஆம் திகதி, இம்மாதம் முதலாம் மற்றும் 04ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்று (08) சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பிற்காக நேற்றும் (07) இன்றும் (08) இரண்டு விசேட நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இம்முறை 736,000 இற்கும் மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment