வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதி என விடுதலை : போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதி என விடுதலை : போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவிப்பு

சிசேரியன் பிரசவத்தின்போது தாய்மார்களை மீண்டும் பிரசவிக்க முடியாத வகையில் மலட்டுத் தன்மை ஆக்கியதாக, ஒரு சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுளளார்.

குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (06) இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்ததை அடுத்து 5 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பில் அவரை நிரபராதி என விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment