கடவுச்சீட்டு பெறுவதற்கான Online ஊடான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் : அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

கடவுச்சீட்டு பெறுவதற்கான Online ஊடான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் : அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களம்

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு ஒருநாள் அல்லது சாதாரண சேவையின் கீழ் நாளொன்றை ஒதுக்கிக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இணையவழியுடாக சேவையை வழங்குகிறது.

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை இன்று (06) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு;

1. அதற்கமைய, இன்று (06) முதல் இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு Online இணைப்பினூடாக முன்கூட்டிய பதிவொன்றை மேற்கொள்ளல் வேண்டும்.

2. எனவே, 2024.12.03ஆம் திகதி செய்வாய்க்கிழமை வரை இதுவரையில் காணப்பட்ட முறைக்கு அமைய நாட்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஒழுங்குமுறைக்கு அமைய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

3. புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகள்/தற்போது கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள்/காணாமல்போன கடவுச்சீட்டுக்கள் என்பவற்றுக்கு இந்தப் புதிய முறையின் ஊடாக பதிவுசெய்ய முடியும்.

4. முன்கூட்டிய பதிவுமுறை ஒருநாள் மற்றும் சாதாரண சேவை என்ற இரண்டு வகைக்கும் செல்லுபடியாகும்.

5. பதிவு செய்வதற்காக விண்ணப்பதாரியின் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செல்லுபடியான தொலைபேசி இலக்கம் என்பன அவசியமாகும். கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது அந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் விண்ணப்பதாரியின் வசம் இருத்தல் வேண்டும்.

6. 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவுசெய்யும்போது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுதல் வேண்டும்.

7. மேலுள்ள தகவல்கபை பூரணப்படுத்தும் தாங்கள் ஏற்புடை அங்கீகரிக்கப்பட்ட புகைப்படசாலை ஒன்றிலிருந்து பெற்றுக் கொண்ட புகைப்பட ரசீதுடன் www.immigration.gov.lk இணையத்தளத்தில் பிரவேசித்து “கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவு செய்தல்” எனும் ஐகன் ஊடாக உள்நுழைந்து ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் பதிவுசெய்ய முடியும்.

8. தங்களது பதிவு வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தங்களுக்கு நாளொன்று SMS குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். ஏற்புடைய SMS குறுஞ்செய்திக்கு அமைய தாங்கள் தெரிவு செய்த இடத்திற்கு (பிரதான அலுவலகம், மாத்தறை, கண்டி, குருணாகல் மற்றும் வவுனியா) ஒதுக்கப்பட்டுள்ள நாளில் விண்ணப்பம் மற்றும் ஏற்புடைய அனைத்து ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் மு.ப. 12.00 மணிக்கு முன்னர் கட்டாயம் சமூகமளித்தல் வேண்டும். அன்றையதினம் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இழக்கப்படுவதோடு, வேறு நாளொன்றுக்கு மீண்டும் பதிவு செய்தல் வேண்டும்.

9. நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளாமல் திணைக்களத்திற்கு வருகை தருவதன் மூலம் தங்களுக்கு கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாது.

https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ இந்த லிங்கை கிளிக் செய்து பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment