நிறுவன தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2024

நிறுவன தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைவர் அல்லது பணிப்பாளரை நியமிப்பதற்கு தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்கள் தேர்தல் சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment