காங்கேசன்துறை, நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, இனி வாரத்தில் 05 நாட்களுக்கு இயக்கப்படுமென கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி நாகை - இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியது.
முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட இக்கப்பல் சேவை, பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட்ட 04 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இனி வாரத்தில் 05 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி பயணிகள் வசதிக்காக எதிர்வரும் 08ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
No comments:
Post a Comment