முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புதுடில்லி நகரத்திற்கு இன்று வியாழக்கிழமை (21) புறப்பட்டார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இவர்கள் இன்றையதினம் காலை 08.19 மணியளவில் இந்திய விமான சேவையின் ஏ.ஐ - 282 விமானத்தின் மூலம் இந்தியாவின் புதுடில்லி நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் நாளையதினம் (22) விரிவுரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment