உயர்தர பரீட்சைக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

உயர்தர பரீட்சைக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

குறித்த பரீட்சையில் இவ்வருடம் 3,33,185 மாணவர்கள் தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வகையில் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண, வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இதனிடையே, உதவி மண்டபப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு பரீட்சை மண்டபங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பரீட்சை மத்திய நிலையத்திற்கான மண்டப பொறுப்பாளர்கள், மேலதிக மேற்பார்வை பொறுப்பாளர்களுக்கு மாத்திரமே கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்தமுடியாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment