நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் உறுப்புரிமையை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றையதினம் (16.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய சாகர காரியவசம், "இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசியப் பட்டியலில் ஒரு பாராளுமன்ற பதவியும் உள்ளது." என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.
160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இந்த தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியதுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment