நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட மின் வெட்டு குறித்து பகிரங்க பொது விசாரணை நடத்தப்படவுள்ளது. இவ்விசாரணை இன்று (05) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படவுள்ளது.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ், இந்த விசாரணை இடம்பெறும்.
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இவ்விசாரணை நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025 மே மாதம் 22 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த விசாரணை நடத்தப்படுகிறது. நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தடுப்பதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்கு, பொதுமக்கள் தொடர்பாளர் ஜயநாத் ஹேரத்தை 077-2943193 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது consultaion@pucsl.gov.lk மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.
No comments:
Post a Comment