இலங்கையின் பிரதம நீதியரசர் ஆகிறார் முர்து பெனாண்டோ - News View

About Us

About Us

Breaking

Saturday, November 16, 2024

இலங்கையின் பிரதம நீதியரசர் ஆகிறார் முர்து பெனாண்டோ

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெனாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ கடந்த ஒக்டோபர்மாதம் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியான இவர் 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார்.

1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment