சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2024

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள பிரதான அலுவலகத்தில் அவர் இன்று (04) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியுள்ளதோடு, அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்தோடு, சுங்க ஊடகப் பேச்சாளராக 3 1/2 வருடங்கள் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment