நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக பிரதமரின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன.
இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக கருதப்பட்டார்.
விருப்பு வாக்குப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment