80 கிலோ கிராம் கஞ்சாவும், மோட்டார் சைக்கிளும் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2024

80 கிலோ கிராம் கஞ்சாவும், மோட்டார் சைக்கிளும் மீட்பு

பூநகரி பகுதியில் 80 கிலோ கிராம்  கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் பூநகரி - கௌதாரி முனை பகுதியில், இருந்து 80 கிலோ கிராம்  கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிள் ஒன்றியும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் . விசேட நிருபர்

No comments:

Post a Comment