10ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் றிஸ்வி சாலி - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, November 20, 2024

demo-image

10ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் றிஸ்வி சாலி

467728737_1026969159472513_4614385029195937141_n%20(Custom)
10ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் றிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின்  கன்னி அமர்வு வைபவ ரீதியாக  ஆரம்பமான நிலையில்,  பத்தாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியர் றிஸ்வி சாலி பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.

வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராவார். 

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத் துறையில் சேவையாற்றி வரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
467636538_931937069082093_1333644917614714581_n%20(Custom)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *