யாழ். அராலியில் வயலுக்குள் பாய்ந்த பஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 17, 2025

யாழ். அராலியில் வயலுக்குள் பாய்ந்த பஸ்

தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பஸ் ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த பஸ்ஸானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது.

குறித்த பஸ் அண்ணளவாக 10-15 kmh வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment