நாளையதினம் (20) நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாளை மறுதினம் (21) ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பூர்வாங்க ஏற்பாடுகளை செய்வதற்காக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நாளை (20) வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது
No comments:
Post a Comment