தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிக்கு தண்டனை : கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் வழங்கிய வாக்குறுதிய சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 11, 2024

தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிக்கு தண்டனை : கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் வழங்கிய வாக்குறுதிய சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்  பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வாக்குறுதியளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்கு தாம் தோள் கொடுப்பதாகவும், நீதிமன்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வாக்குறுதியளித்தார்.

அவ்வாறே, உயர்த்து ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, இதன் பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment