சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 11, 2024

சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சிறார்களை சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்கள் இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற கவலைகளுக்கு மத்தியில் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

தடையை அமல்படுத்துவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, வரும் மாதங்களில் வயது சரிபார்ப்பு சோதனையை அரசாங்கம் தொடங்கும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.

Facebook, Instagram மற்றும் TikTok போன்ற தளங்களில் உள்நுழைவதற்கான குழந்தைகளுக்கான குறைந்தபட்ச வயது முடிவு இன்னும் செய்யப்படவில்லை, ஆனால் 14 முதல் 16 வயது வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அல்பானீஸ் கூறினார்.

16 வயதுக்குட்பட்ட பயனர்களைத் தடுப்பதே தனது சொந்த விருப்பமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

இது குறித்து பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், ”கால்பந்து மைதானங்களிலும், நீச்சல் குளங்களிலும், டென்னிஸ் மைதானங்களிலும் குழந்தைகளை பார்க்க விரும்புகிறேன்.

அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் சமூக ஊடகங்கள் சமூக தீங்கு விளைவிக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் கூறினார்.

குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வைப்பதற்கான கூட்டாட்சி சட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment