இதுவரை சுமார் 10 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் : கிடைக்காவிட்டால் தபால் அலுவலகங்கள் ஊடாக பெறலாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 12, 2024

இதுவரை சுமார் 10 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் : கிடைக்காவிட்டால் தபால் அலுவலகங்கள் ஊடாக பெறலாம்

எதிர்வரும் 3 தினங்களில் வாக்களார் அட்டை கிடைக்காவிட்டால் அதனை தபால் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென உப தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற முடியும். 

தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் தினம் வரை இந்த சந்தர்ப்பம் வாக்காளர்களுக்கு உள்ளது. 

இதுவரை சுமார் 10 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் சில தினங்களில் விநியோக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உப தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment