தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஜனாதிபதி, பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2024

தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஜனாதிபதி, பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய சொத்து பிரகடன சட்டத்தின் பிரகாரம் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து பொதுப் பிரதிநிதிகளும் சொத்து பிரகடனங்களை சமர்ப்பித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததோடு, இதன்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தமது சொத்துகள் மற்றும் கடன்களை பிரகடனப்படுத்த வேண்டும்.

முன்னர் அரசியல்வாதிகளின் சொத்து பொறுப்பு அறிக்கைகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதிய சட்டத்தின்படி அந்த சொத்து பொறுப்பு அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்துக்கு சென்று சொத்துப்பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் சமர்ப்பிக்காதோர் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என, பிரேமநாத் சி.தொலவத்த எம்.பி. தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் தமது சொத்து பிரகடனங்களை சமர்ப்பித்தோரில் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment