வாக்குறுதிகள் மாத்திரம் போதாது, அவற்றை எப்படி எத்தனை நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துவீர்கள் என தெரிவியுங்கள் : வேட்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ள பவ்ரல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 20, 2024

வாக்குறுதிகள் மாத்திரம் போதாது, அவற்றை எப்படி எத்தனை நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துவீர்கள் என தெரிவியுங்கள் : வேட்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ள பவ்ரல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் பரந்த வார்த்தைகள் கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைப்பதற்கு பதில் அவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசத்தை முன்வைக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கவுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 26ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடவுள்ளார்.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களின் வாக்குறுதிகளிற்கும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது.

அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்கள் யதார்த்த சூழ்நிலையுடன் ஒத்துப்போகததாக காணப்பட்டமையே இதற்கான காரணம்.

அவர்கள் சந்தேகமற்ற வாக்காளர்களை கவர்வதற்காக வாக்குறுதிகளை வழங்கினார்கள். அல்லது அவர்களின் பதவிக் காலத்தின் இடையில் சூழ்நிலைகள் மாறியதால் அவர்களால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையேற்பட்டது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளது.

அரசியலை சுத்தம் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல், வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால எல்லையை முன்வைக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்துடன் செயற்திட்டமொன்றையும் பவ்ரல் கோரவுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தங்கள் சொந்த கொள்கைகளை திட்டங்களை கொண்டிருப்பதற்கான உரிமையுள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மக்களிற்கு தெரிவிக்க வேண்டும் என பவ்ரல் எதிர்பார்க்கின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை முன்வைக்குமாறு வேட்பாளர்களை கோரவுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கொள்கை விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுப்பார்கள் என்பதை வேட்பாளர்கள் கோடிட்டுக்காட்ட வேண்டும் என தெரிவித்துள்ள பவ்ரல், அந்த கொள்கைகளின் பொருளாதார அரசியல் சமூக தாக்கங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களிற்கு முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 1000 பாடசாலைகளை உருவாக்குவேன் என தெரிவித்தால் அதற்கான நிதியை அவர் எங்கிருந்து பெற்றுக் கொள்வார் என்பதை தெரிவிக்க வேண்டும், சமூகத்திற்கு அந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பலாபலன்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment