ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கம்பஹா மாவட்ட எம்.பியும் முன்னாள் அமைச்சருமான வைத்தியர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிதுள்ளார்.
சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, காலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளேயின் மனைவியும் ஆவார்.
2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துகொண்டார்.
பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.
No comments:
Post a Comment