நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, August 12, 2024

நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அலி சப்ரி

அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அண்மையில் இராஜினாமா செய்த விஜயதாஸ ராஜபக்ஷ வகித்த நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக குறித்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே வகிக்கும் தற்போது வகிக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக இந்த அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அலி சப்ரி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment