சிறை அதிகாரியிடமிருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மீட்பு : கைதான சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 11, 2024

சிறை அதிகாரியிடமிருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மீட்பு : கைதான சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு

கைதான சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, இராஜகிரிய பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளுக்கமைய நேற்றையதினம் (10) இராஜகிரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு சிறைச்சாலை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
T56 ரக துப்பாக்கி 01
அதற்கான மெகசின் 01
கைத்துப்பாக்கி 01
அதற்கான மெகசின் 01
பல்வேறு வகை தோட்டாக்கள் 400+
ஹெரோயின் 6g
கஞ்சா 7g
குஷ் 2g

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment