நாடளாவிய ரீதியில் நேற்று (9) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று (10) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நள்ளிரவு (10) முதல் அமுலுக்குவரும் நிலையில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, புகையிரத நிலையங்களின் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவ படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு, பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண்டி, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை, பேராதெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, அம்பேவெல, புத்தளம், சிலாபம், மாதம்பே, நாத்தாண்டிய, அலவ்வ, பொல்கஹவெல, குருணாகல், மஹவ ஆகிய புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட 45 புகையிரத நிலையங்களில் பாதுகாப்புப் படையினர் பணியமர்தப்பட்டுள்ளனர்.
மேல் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment