ரயில்வே ஊழியர்களுக்கு வெளியான இறுதி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2024

ரயில்வே ஊழியர்களுக்கு வெளியான இறுதி அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் கட்டுப்பாட்டாளர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே வெளியிட்டுள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களம் அத்தியாவசிய சேவையை வழங்கி வருகின்ற போதிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment