உயிரினங்களை கடத்த முற்பட்ட ஐவர் கடற்படையினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

உயிரினங்களை கடத்த முற்பட்ட ஐவர் கடற்படையினரால் கைது

இலங்கையின் உயிரினங்களை பிடித்து வெளிநாட்டுக்கு கடந்த முற்பட்ட ஐந்து பேர் மீன்பிடி படகு ஒன்றுடன் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 மற்றும் 67 வயதுடைய ஐந்து நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளால் தென் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த மீன்பிடி படகிலிருந்து 13 மலைப்பாம்புகள், ஒரு உடும்பு, ஒரு பெரிய ஆமை மற்றும் 3 கிளிகள் ஆகிய உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment