முஸ்லிம்கள் செரிந்து வாழும் பிரதேசங்களில் மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமியுங்கள் - பிரமித்த பண்டார தென்னகோன் - News View

About Us

About Us

Breaking

Friday, July 12, 2024

முஸ்லிம்கள் செரிந்து வாழும் பிரதேசங்களில் மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமியுங்கள் - பிரமித்த பண்டார தென்னகோன்

ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மரணம் சம்பவிக்கும்போது முஸ்லிம்கள் தங்களது (ஜனாஸாக்களை) சமய வழிமுறைக்கு அமைய 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த நியமனங்களை மேற்கொள்ளுமாறு அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்து மூலம் விடுத்துள்ள வேண்டுகோள் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் மக்களின் (ஜனாஸாக்களை) இறுதிக்கிரியை சடங்குகள் ஏனைய மத சடசங்குகளை போலன்றி 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் பல்வேறு காரணங்களினால் இதனை உரிய காலத்திற்குள் நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை இம்மக்கள் எதிநோக்க வேண்டியுள்ளது. இது நல்லாட்சியின் நெறிமுறை பொறுப்புகளுக்கும் முரணானதாகும்.

எனவே முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் மரபு ரீதியான கடமைகளை எளிதாக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கூடுதல் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க பரிந்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment