மதச் சடங்குகளுக்கமைய உடல்களின் இறுதிக்கிரியை மேற்கொள்ள சட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

மதச் சடங்குகளுக்கமைய உடல்களின் இறுதிக்கிரியை மேற்கொள்ள சட்டம்

கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்டவாறு, வைரசு தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் பூதவுடல்கள் தகனஞ் செய்தல் கட்டாயமாக்கப்பட்டது. 

இத்தீர்மானம் பல்வேறு மதக் குழுக்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும், குறிப்பாக இஸ்லாமியர்களின் மனம் புண்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

அது தொடர்பாக பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கைகளின் பிரகாரம், கொவிட் வைரசு நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல் வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவே மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனால், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஏதேனுமொரு ஆளுக்கு அல்லது உறவினருக்கு தமது சுயவிருப்பின் பிரகாரம் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது தகனஞ் செய்வதற்கான தெரிவுக்கு இடமளிக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், தேவையாயின் மருத்துவ பீடங்களுக்கு உடலங்களை வழங்குவதற்குமான சட்டத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment