நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்களை முன்னெடுப்பது நாட்டுக்கு செய்யும் மிகப்பாரிய தீங்கென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
சில தொழிற்சங்கங்கள் தாம் சார்ந்த அரசியல் கட்சிகளை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் 60 மற்றும் 70 களில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் ஒரு நெருக்கடிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் எனவும், வேலை நிறுத்தங்களால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துவிடாமல் இருப்பது தொழிற்சங்கங்களின் பாரிய பொறுப்பு எனவும், பொருளாதார சீர்திருத்தங்களால் குறுகியகால நிலை அனைவருக்கும் பொதுவானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவராகவும் பொருளாதாரப் பிரிவில் பொருளாதாரப் பேராசிரியராகவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment