வாக்குச் சீட்டுகளை அச்சிட 600 மில்லியன் ரூபா செலவாகும் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 14, 2024

வாக்குச் சீட்டுகளை அச்சிட 600 மில்லியன் ரூபா செலவாகும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் எந்தவொரு தேர்தலுக்கும் அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குத் தேவையான பணியாளர்கள் அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment