உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு இன்று (18) முதல் நடைமுறைக்கு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகள் முடிவடையும் வரை அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றி வருகின்றார்.
மத்திய மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உதவி சேவைகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி இடமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின் கீழ் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலை தடுக்க தவறியவர்களில் ஒருவர் என நிலாந்த ஜெயவர்த்தனவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment