எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அக்கட்சி இவ்விடயத்தை அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமது கட்சிக்குள்ளேயே தாங்கள் வேட்பாளரை நிறுத்துவதால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இல்லை என சாகர காரியவசம் இங்கு மேலும் தெரிவித்தார்.
கட்சியின் உறுப்பினர் ஒருவர் மொட்டு சின்னத்தில் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டதாகவும், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பெரும்பாலானோர் தங்களது ஆதரவை வழங்கியதாக தெரிவித்தார்.
அதற்கமைய மொட்டுச் சின்னத்தின் கீழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டாலோ, கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாராவது போட்டியிட்டால் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.









No comments:
Post a Comment