தேயிலை உர நிவாரணம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 29, 2024

தேயிலை உர நிவாரணம் அதிகரிப்பு

தேயிலை உர நிவாரணம் 4000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரணத்தை 2000 ரூபா வரை வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டின் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெட்ரிக் தொன் வரை குறைவடைந்துள்ளது. குறித்த எண்ணிக்கையை 300 மில்லியன் மெட்ரிக் தொன்னாக அதிகரிப்பதே இதன் இலக்காகும்.

தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலேயே 2000 ரூபாவை நிவாரணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும், குறித்த தொகை போதுமானதாக இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய நிவாரணத்தை 5000 ரூபாவாக அதிகரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து உர நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment