எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான செலவுகளுக்காக ரூ.1.4 பில்லியன் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தபால் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
சாதாரண தபால், பதிவுத் தபால், காகிதாதிகள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மதிப்பிட்டதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கென தபால் திணைக்களத்தின் செலவுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த தொகை உத்தேச மதிப்பீடு எனவும் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment