குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் : நீதித்துறைச் சட்டத்தின் கீழ் இரண்டு வர்த்தமானிகளுக்கும் அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் : நீதித்துறைச் சட்டத்தின் கீழ் இரண்டு வர்த்தமானிகளுக்கும் அங்கீகாரம்

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இன்று (23) பாராளுமன்றத்தின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று (23) மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

(101ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் 2024 மே 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2360/22 மற்றும் 2371/13 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகளுக்கும் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment