2024ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களை கருத்திற்கொண்டு இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் Online ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment