அரச நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 25,000 ரூபாவை விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரையான சேவைக்கால அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவிற்குப் பதிலாகவே இத்தொகை வழங்கப்படுகிறது.
இவர்களுக்கான சேவை காலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் மாதாந்த கொடுப்பனவாக விஷேடமாக இதை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் கடந்த (24) எடுக்கப்பட்டது.
இதற்கிணங்க இந்த கொடுப்பனவானது பொறியியல் சேவை, கட்டடக்கலை சேவை மற்றும் நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, உள்நாட்டலுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள்,திணைக்களங்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment