கல்முனை நகரில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 18 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை நகரமானது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான சேவை வழங்கும் நிலையமாக அமைவதுடன், குறித்த பிரதேசம் நிர்வாக ரீதியாகவும், வணிகம் மற்றும் வர்த்தக கேந்திர நிலையமாகவும் கருதப்படுகின்றது.
கல்முனை நகர சபை எல்லைக்கான அபிவிருத்தித் திட்டத்திற்கமைய, கல்முனை கடலோரப் பிரதேசம் உல்லாச மற்றும் பொழுதுபோக்குகளுக்குப் பொருத்தமான வலயமாகப் பெயரிடப்பட்டிருப்பினும், உல்லாச மற்றும் பொழுதுபோக்குச் செயற்பாடுகளுக்கு நகரத்தில் போதியளவு வசதிகளின்மை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், குறித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்முனை கடற்கரையோரப் பிரதேசத்தில் வாடி வீடு வீதியில் அமைந்துள்ள 01 றூட் 29.44 பேர்ச்சர்ஸ் கொண்ட காணித்துண்டொன்றை சுற்றுலா வசதி மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கான கருத்திட்டத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment