தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கதிரவேல் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.
சண்முகம் குகதாசன் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 16,770 வாக்குகளை பெற்றிருந்தார்.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் பட்டியலில் அவர் முதலாவதாக காணப்பட்டார்.
அந்த வகையில் கதிரவேல் சண்முகம் குகதாசன் அடுத்த வாரம் திருகோணமலை மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment