கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்குமிடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும், ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான இச்சந்திப்பை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
இதன்போது பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடி மாகாண மட்டத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment