சுபோதினி அறிக்கையின் சம்பள முரண்பாட்டுத் தீர்வினை வழங்கும்படி வலியுறுத்தி அதிபர், ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 12, 2024

சுபோதினி அறிக்கையின் சம்பள முரண்பாட்டுத் தீர்வினை வழங்கும்படி வலியுறுத்தி அதிபர், ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சுபோதினி அறிக்கையின் மூன்றில் இரண்டு பகுதி சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி இலங்கை பூராகவும் இன்று (12) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் இவ்வாற்பாட்டம் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்னால் ஆரம்பித்து ஊர்வலமாக பிரதான வீதி வரை சென்றது.

இங்கு, சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, அரசே சுபோதினி அறிக்கையின் மூன்றில் இரண்டு பகுதியை வழங்கு, பொருட்களின் விலைகளை குறை, கல்விச் சுமையை பெற்றோர் மீது திணிக்காதே, மாணவர்களுக்கு மானிய முறையில் கற்றல் உபகரணங்களை வழங்கு போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தி நூற்றுக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஊர்வலமாக ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் எதிர் வருகின்ற 27ஆம் தேதி நாடும் ஊராகவும் இணைந்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நாங்கள் செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம். என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

அதுபோல், தற்போது கல்வி அமைச்சும் ஆசிரியர்-அதிபர் சம்பள வேறுபாட்டை களைவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு இருப்பதாகவும் அதனை தீர்க்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அதற்கான தீர்வுகளை வழங்குவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, ஆசிரியர், அதிபர் சங்கக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இங்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை வலைய இணைப்பாளர் எஸ்.எம். ஆரிப், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலைய செயலாளர் எம். எஸ். எம். சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலைய இணைப்பாளர் ஏ. எம். எம். சாகிர் ஆகியோருடன் அங்கத்தவர்களும் கலந்துகொண்டு இங்கு கருத்து வெளியிட்டனர்.

No comments:

Post a Comment