குவைத்தில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 12, 2024

குவைத்தில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் பலி

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment