வீடியோவை பதிவு செய்த இளைஞன் கௌரவிப்பு : 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 12, 2024

வீடியோவை பதிவு செய்த இளைஞன் கௌரவிப்பு : 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைப்பு

சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய குறித்த சிறுமியின் தந்தையான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞன் பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, அந்த இளைஞனுக்கு 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு - மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடாத்திய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடாத்திய குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், சந்தேகநபரான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞன் நேற்று (12) பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, அந்த இளைஞனுக்கு ரூ.5 இலட்சம் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த சன்மானம் வழங்கி வைக்கப்பட்டது.

தருஷ சந்தருவான் கொடிகார என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment