நேருக்கு நேர் மோதிய வேன், பஸ் : 3 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 12, 2024

நேருக்கு நேர் மோதிய வேன், பஸ் : 3 பேர் பலி

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளர் என தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment