இலங்கையின் தென் கடலில் 150 கிலோ ஹெரோயின் மீட்பு : காலி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 15, 2024

இலங்கையின் தென் கடலில் 150 கிலோ ஹெரோயின் மீட்பு : காலி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

இலங்கையின் தென் கடலில் கடற்படையினர் மேற்கொண்ட ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (14) இலங்கைக்கு தெற்கே சுமார் 400 கடல் மைல் (740 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில், போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த படகை காலி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த பல நாள் மீன்பிடிப் படகில் சுமார் 150 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினர் படகை முழுவதுமாக சோதனையிட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment